What does watermelon (தர்பூசணி) have in it?

Spread the love

தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தர்பூசணி ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழமாகவும் இருக்கிறது. அது உங்களுக்கு உடல் வெப்பத்தை தவிர்க்க உதவும். கப் ஒன்றுக்கு 46 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ள இதில், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பல சத்துக்கள் அதிகமாக உள்ளது.

தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்,

உங்கள் தாகத்தை தவிர்க்க உதவும்.

குடிநீர் உங்கள் உடலில் நீரை தக்கவைத்து கொள்ள ஒரு முக்கிய வழி. அதர்க்காக அதிகம் தண்ணீர் உள்ள உணவு வகைகளை சாப்பிடலாம். சுவாரஸ்யமாக, தர்பூசணி 92% நீர் சத்து உள்ளது.

நீர் சத்து அதிகம் உள்ள உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் முழுமையாக உணர உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள நீர் மற்றும் நார் சத்து கலவை உங்கள் உடலில் அதிக கலோரிகள் சேராமல் பார்த்து கொள்கிறது.

ஊட்டச்சத்துக்கள் நிரந்தது

பழங்களிலேயே, தர்பூசணி தான் மிகக் குறைவாக கலோரிகளில் இருக்கும் பழம். கப் ஒன்றுக்கு 46 கலோரிகள் மட்டுமே. இது பெர்ரி போன்ற குறைந்த சர்க்கரை உள்ள பழங்களைவிட குறைவாக இருக்கிறது.

ஒரு கப் (154 கிராம்) தர்பூசணி, பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளன,

வைட்டமின் C: 21%.
வைட்டமின் A: 18%.
பொட்டாசியம்: 5%.
மெக்னீசியம்: 4%.
வைட்டமின்கள் B1, B5 மற்றும் B6: 3%.

செரிமானத்தை முன்னேற்றுவிக்க உதவுகிறது

தர்பூசணியில் உள்ள நீர் சத்து மற்றும் நார் சத்து உங்கள் செரிமாணத்தில் ஒரு முக்கிய பங்கு வகுக்கிரது. நார் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதனால், தர்பூசணி உட்பட, சாதாரண குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இரத்த அழுத்தம் குறைகிறது

உயர் இரத்த அழுத்தம், முதன்மை கவனிப்பில் காணப்படும் மிகவும் பொதுவான நோய் ஆகும். இது ஆரம்பத்தில் கவனிக்கப்படாவிட்டால் பொதுவாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற மரண நோய்களை இட்டுச் செல்கிறது.

தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம் உங்கள் இரத்த நாளங்களை நிதானமாக தளர்த்த உதவுகிறது. நாளங்கள் விரிவுபடுத்தப்பட்டால், அதிக ரத்த ஓட்டாதால் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். மேலும் பக்கவாதம் மற்றும் இதய நோய்த்தாக்கம் போன்றவற்றிற்கு குறைவான வாய்ப்பு இருக்கும்.

தர்பூசணி மற்றும் சிறுநீரக கோளாறுகள்

தர்பூசணிகள் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உடலின் சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. தர்பூசோனின் உயர் நீர் உள்ளடக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தூண்டுகிறது. இது சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தி, ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதர்க்கு எப்போதும் உதவுகிறது.

இன்னும் நன்றாக சொன்னால், தர்பூசணியில் உள்ள கால்சியம், உடலில் இருக்கும் அணு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், அணு கட்டமைப்பை பராமரிப்பது, மற்றும் அணு வேறுபாடு செயல்முறைக்கு நன்மை பயக்கும்.

ஆண்குறி விறைப்பு செயலிழப்பு

தர்பூசணி, ஆண்குறியின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் உறவின் பொழுது ஆண்குறி விரைப்பு குறையாமல் இருக்கும். இரத்தக் குழாய்களின் சுருக்கங்கள், பொதுவாக நீரிழிவு, உயர் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சனைகள் நீங்குகிறது. சில ஆண்கள் இதர்க்கு வயாகரா மாத்திரை பயன்படுத்துகிறார்கள். தர்ப்பூசணியில் உள்ள அமினோ அமிலம் சிட்ருல்லின் இயற்கையாகவே இரத்த நாளங்காளை தளர்க்க உதவும்.


Spread the love

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *