நன்னாரி வேர் பயன்கள்

Spread the love

நன்னாரி ஒரு அற்புதமான மூலிகை

நன்னாரி என்றழைக்கப்படும் மூலிகை கோடைகாலத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய அதிசய மூலிகை ஆகும். பொதுவாக கோடைகால வியாதிகளிலிருந்து பாதுகாத்து கொள்ள உபயோகிக்கும் ஒரு குளிர்ச்சியான மருத்துவ மூலப்பொருள் ஆகும். இந்த மூலிகை வேரில் இருந்து தயாரிக்கப்படும் கலவையை நன்னாரி சாறு என்று அழைக்கின்றனர். கோடையில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக, ‘நன்னாரி’ வேர்கள் இருந்து எடுக்கப்பட்ட சாற்றின் கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் பனை சர்க்கரை (பனங்கல்கண்டு) ஆகியவற்றை சேர்த்துக் கொண்டனர் நம் முன்னோர்கள். காலப்போக்கில் பனை சர்க்கரைக்கு பதில் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்த தொடங்கினர், மற்றும் மக்கள் மற்ற கவர்ச்சிகரமான மாற்றை நோக்கி நகர்ந்தனர்.

இனிமையான வாசனை உடைய இந்த வேர் வெளிப்புற பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும், உள் பகுதி வெள்ளை நிறமாக இருக்கும். மலை அடிவாரத்தில் காணப்படும் இந்த மூலிகையில் இருந்து வேர்கள் மட்டுமே பிரித்தெடுக்கப்படுகின்றன. ‘நன்னாரி’ சாறு அதன் வேர்களிலிருந்து நீராவி வடிகட்டி மூலம் தயாரிக்கப்படுகிறது, அதன் பிறகு சிட்ரிக் அமிலம், தண்ணீர் மற்றும் சர்க்கரை கலவையாக சில விகிதத்தில் கலக்கப்படுகிறது. இவ்வாறு நன்னாரி சாறு தயாரிக்கப்படுகிறது.

நன்னாரியின் நன்மைகளில் சில
  • உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன் மட்டும் இல்லாமல், உடல் வலி நிவாரணமாகவும் இது செயல்படுகிறது.
  • மலச்சிக்கல் போக்க உதவுகிறது.
  • அமிலத்தன்மையிலிருந்து நிவாரணமளிக்கும்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
  • கல்லீரல் மற்றும் மண்ணீரல், சிறுநீரக கோளாறுகள், மூச்சுத் திணறல், இரத்த சோகை மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றின் வீக்கத்திற்கு இது சிறந்தது.

Spread the love

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *