முடி கொட்டுவதர்க்கு முக்கிய காரணங்கள்

Spread the love

தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் முடி கொட்டுதல்: தொடர்புடையதா?

ஒரு நல்ல இரவு தூக்கம் உங்களை மறுநாள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால் தூக்கம்மின்மை உங்கள் உடல் மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரதிற்கு தீங்கு ஆகும்.

தூக்கம்மிண்மையால் வரும் பிரச்சனைகள் – நீரிழிவு, இதய நோய், மனநல பிரச்சினைகள், உடல் பருமன், சளி, காய்ச்சல் மற்றும் உங்கள் முடி கொட்டுதல் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

மன அழுத்தமும் தூக்கமிண்மையும்

காலையில் எழுந்தவுடன், நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? அல்லது சோர்வாகவும் எரிச்சலாகவும் இருக்கிறீர்களா? பல மக்களுக்கு, இதில் இரண்டாவது மிகவும் பொதுவானது.

உங்களுக்கு சீரான தூக்கம் இல்லாமைக்கு காரணம் உங்களுடைய வேலை சுமை, கவலை, அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். ஏன், உங்கள் கைபேசி கீழே விழுந்திருந்தாலும் கூட உங்கள் தூக்கம் கெடலாம். நீங்கள் சாப்பிடும் முறையிலும் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதுவும் கூட உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.

மன அழுத்தமும் முடி கொட்டுதலும்

மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 100 முடி வரை இழக்கிறான். மன அழுத்தம் உங்கள் முடி மட்டும் அல்ல, உங்கள் மொத்த உடல் ஆரோகியத்தையும் பாதிக்கக்கூடியது. அது உங்கள் உடலை தவறாக வேலை செய்ய வைக்கிறது, நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால் புதிதாக வளரகூடிய முடி குறைவான ஆரோக்கியமானதாக இருக்கும், மேலும் சில இடங்களில் முடி உதிர்தலைத் தொடரலாம்.

நீங்கள் சந்தோசமாகவோ அல்லது மன அழுத்தம் இல்லாமலோ இருந்தால் அது உங்கள் முடி வேர்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் முடி உதிர்வை குறைக்கிறது. அது மேலும் உங்கள் இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்லது.

புரத்தச்சத்து குறைபாடு

நீங்கள் உண்ணும் உணவில் போதுமான புரதம் கிடைக்கவில்லையெனில், உங்கள் உடலானது உங்கள் முடி வளர உதவும் புரத்தத்தை உபயோகிக்க துவங்கும். அதனால், உங்கள் முடி வளர்ச்சி குறையும். இது புரதம் குறைந்து இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து முடி கொட்ட ஆரம்பிக்கும்.

நீங்கள் புரதம் அதிகம் உள்ள உணவு வகைகளை உண்டு வந்தால் இந்த குறைபாடு நீங்கும்.

வியக்கவைக்கும் எடை இழப்பு

திடீரென உங்கள் உடல் எடையை குரைப்பது உங்களின் உடலை மட்டும் அல்ல, அது உங்கள் முடியையும் பாதிக்கும். உங்கள் உடலை வருத்தியோ அல்லது உணவு உண்ணாமல் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சத்து குறைப்பாடால் அது உங்கள் முடியையும் பதிக்கும்.

அதிகப்படியான முடி அலங்காரம்

கடுமையான முடி அலங்காரம் செய்தல், முடி கொட்டுதலை அதிகப்படுத்தும். இறுக்கமான ஜடை, முடியை நேர் செய்தால், சுருள் முடி செய்தல், இரசாயன அல்லது அதிக வெப்பம் கொண்ட எண்ணெய் பயன்படுத்துதல் ஆகியவை காரணமாகும்.


Spread the love

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *