முருங்கையின் பயன்கள்

Spread the love

முருங்கையை தமிழ் மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். ஏன் என்றால் இயக்குநரும் நடிகரும்மான திரு பாக்கியராஜ் அவர்கள் அப்படி ஒரு பில்ட் அப் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதிலும் உண்மைதான் இருக்கிறது.

வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.
வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.

முருங்கை பூ, முருங்கை இலை மற்றும் முருங்கை காய் இவை அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது.

சத்து நிறைந்த முருங்கையில் ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு வைட்டமின் சி உள்ளது. பாலை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. கேரட்-ல் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின்-A உள்ளது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் நிறைந்தது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அதிகமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

முருங்கையில் என்னவெல்லாம் செய்யலாம் மற்றும் அதன் பயன்கள்,

 • மெலிந்த உடல் உடையவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் தேறி வரும், வலுப்பெறும்.
 • இலையை அரைத்து அதன் சாறு குடித்தால் தீர விக்கல் நீங்கும்.
 • முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.
 • இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை உடையது.
 • சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.
 • இலையின் சாருடன் தேன் கலந்து இமையில் தடவி வர கண் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
 • தாய் பால் அதிகரிக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும்.
 • வயிற்று புண், அஜிரண கோளாறு மற்றும் மல சிக்கல் போன்ற வாயிரு சம்மந்த பட்ட வியாதிகள் தீரும்.
 • உடல் சூடு நீங்கி வர, பித்தம் குறையும்.
 • முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
 • முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும், நினைவாற்றல் அதிகரிக்கும்.
 • இயற்கையின் வயகரா முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
 • முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
 • முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.
 • முருங்கைப் பிஞ்சு முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
 • முருங்கையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும்.
 • முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.
 • முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.
 • முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

பழமொழி
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்.

இந்த பழமொழியின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட மக்கள் அதை வளர்ப்பதை தவிர்த்தார்கள். நாம் நம் முன்னோர்களும், சித்தர்களும் சொன்ன ஒரு பயனுள்ள தகவலை சரியாக புரிந்து கொண்டு செயல் பட வேண்டும். ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் ஆகியவைகள் கிடைக்கிறது. இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகைப் பொருட்கள். இவைகளை தினமும் யார் உணவாகப் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள்.


Spread the love

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *